மனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார்.

வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, கந்தனுண்டு கவலையில்லை! தீராத துயரங்களை, தீராத கஷ்டங்களை வெளியில் கூட சொல்ல முடியாத மனக்கவலையை தீர்த்து வைக்க முருகப்பெருமானை, மனமுருக அழைத்தால், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து, அருள் பாவிக்கும் சக்தி கொண்டவர் தான் அழகன் முருகப்பெருமான். இந்த முருகப்பெருமான் வழிபாட்டில் அருணகிரிநாதர் நமக்காக சொல்லிவிட்டு சென்ற ஒரு அருமையான மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி புண்ணியம் நமக்கு கிடைப்பதோடு, வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தும் விலகி, துயரங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். வெறுமனே வாயால் இந்த மந்திரத்தை உச்சரித்தால் மட்டும் போதாது. அந்த முருகப்பெருமானே முழுமையாகச் சரணடைந்து, நம்முடைய ரத்தத்திலும் சதையிலும் முருகப்பெருமானின் நாமம் கலந்து, எல்லாம் அவன்தான் என்ற நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டிய மந்திரம் இது.

அருணகிரிநாதர் அருளிய முருகப்பெருமானின் மந்திரம் உங்களுக்காக இதோ!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

உருவமும் நீ தான், உருவம் இல்லாத அருவமும் நீ தான், இருப்பதும் நீ தான், இல்லாததும் நீ தான், மலரும் நீ தான், மலருக்கு முன் இருக்கும் அரும்பும் நீ தான், ஒளியும் நீ தான், ஒலியும் நீ தான், கருவும் நீ தான், கருவிலிருந்து பிறக்கும் உயிரும் நீ தான், எல்லோருக்கும் குருவும் நீ தான், உன்னையே கெதி என்று உன் பாதங்களில் சரணடைகின்றேன் முருகா! என்பது தான் இதற்கு அர்த்தம். நல்லது கெட்டது, இருப்பது இல்லாதது, என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாமும் அவனே, எல்லா செயல்பாடிற்க்கும் பின்னால் அவன் தான் இருக்கின்றான் என்று, முருகப்பெருமானை சரணடைந்து, என் வாழ்க்கையை நீயே பார்த்துக்கொள் என்று, உங்களுடைய வாழ்க்கையை முருகப்பெருமானிடம் ஒப்படைத்துவிட்டு, அதன் பின்பு அன்றைய தினத்தை தொடங்க ஆரம்பியுங்கள்.

காலை இறை வழிபாடு செய்யும் போது, முருகப் பெருமானை நினைத்து 6 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். முடிந்தவர்கள் இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்துகொண்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருந்தால், உங்களை விட பாக்கியசாலி, உங்களை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles