குக் வித் கோமாளி 5ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அனைவருக்கும் பிடித்தவர்

குக் வித் கோமாளி 5ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அனைவருக்கும் பிடித்தவர்
குக் வித் கோமாளி 5ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அனைவருக்கும் பிடித்தவர்

அதிகளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனை எட்டி இருக்கிறது. சமையலுடன் சேர்த்து, காமெடியையும் ரசிகர்களுக்கு வாரி வழங்கும் இந்த நிகழ்ச்சி, ஹிட் அடிக்க காரணமும் இதுதான்.

குக் வித் கோமாளி சீசன் 5:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களை ஒரு நிறுவனம் தயாரித்தது. ஆனால், இந்த சீசனில் ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக அந்த நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி கொண்டது. இதையடுத்து, செஃப் தாமுவுடன் இன்னொரு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் விலகி விட்டார். இதையடுத்து புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக வந்தார்.

இந்த சீசனின் குக் வித் கோமாளியில், பிரியங்கா தேஷ்பாண்டே, இர்ஃபான், ஸ்ரீகாந்த் தேவா, விஜய் வசந்த், அக்ஷய் கமல், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் போட்டியாளராக பங்கேற்றனர். இந்த நிலையில், போட்டியின் நிலை மாற மாற, இதிலிருந்து போட்டியாளர்கள் பலர் எலிமினேட் ஆகி வருகின்றனர்.

இதுவரை வெளியேறியவர்கள்:

குக் வித் கோமாளியில், முதல் இரண்டு வாரங்கள் போட்டியாளர்களை எலிமினேட் செய்ய மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து, போட்டியை கடுமையாக்க, சிலரை எலிமினேட் செய்வர். அந்த வகையில், முதல் போட்டியாளராக வெளியேறியவர் ஸ்ரீகாந்த் தேவா.

டேஞ்சர் சோனில் ஜோயாவுடன் இருந்த இவர், வெளியேறினார். இதையடுத்து, சமீபத்தில் சீரியல் நடிகர் விஜய் வசந்த் வெளியேறினார். இந்த வாரமும் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருக்கிறார்.

இந்த வாரம் வெளியேறிவர்!

Cookuwithcomali5 |

கடந்த சில வாரங்களாக டேஞ்சர் சோனில் இருந்த ஒரு போட்டியாளர்தான் தற்போது வெளியேறி இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ஷாலின் ஜோயாதான். இந்த சீசனில் ரசிகர்கள் பலரை கவர்ந்தவராக இருந்த போட்டியாளராக இருந்த இவர், தற்போது குறைவான மதிப்பெண் பெற்று வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதனால், இனி குக் வித் கோமாளி 5-ல் பொழுது பாேக்கிற்கு யாரும் இருக்க மாட்டார்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஷாலின் ஜோயா டிடிஎஃப் வாசனின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியாக வந்த இன்னொரு நிகழ்ச்சி!!!

குக் வித் கோமாளியை முதலில் தயாரித்த நிறுவனம் பின்னர் வேறு தொலைக்காட்சி சேனலுக்கு சென்று அங்கும் இதே போன்ற நிகழ்ச்சி ஆரம்பித்தது. அதன் பெயர் டாப் குக் டுப் குக். இந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடையவில்லை என்றாலும், தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வெங்கடேஷ் பட்தான் நடுவராக இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர். இருப்பினும் குக் வித் கோமாளி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ரசிகர்களிடம் பழகிவிட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு நன்றாக இருக்கிறது. இருப்பினும் முந்தைய சீசன்களை போல இதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்ற கருத்தும் எழுதுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles