ஏழரை சனிக்கு நிவாரணம் அளிக்கும் மகாசிவராத்திரி பூஜை: சிவன், சனி அருள் சேர்ந்து கிட்டும்

ஏழரை சனிக்கு நிவாரணம் அளிக்கும் மகாசிவராத்திரி பூஜை: சிவன், சனி அருள் சேர்ந்து கிட்டும்
ஏழரை சனிக்கு நிவாரணம் அளிக்கும் மகாசிவராத்திரி பூஜை: சிவன், சனி அருள் சேர்ந்து கிட்டும்

தென்னாடுடைய சிவனாகவும் அண்ட சாரசரங்களின் இறைவனாகவும் இருக்கும் சிவபெருமானுக்கு உகந்த நாள் சிவராத்திரி. அதுவும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. வேத புராணங்களின் படி இந்த நாளில்தான் சிவ பெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகின்றது. மஹாசிவராத்திரி அன்று சிவன் மற்றும் அன்னை பார்வதியை வழிபடுவது வாழ்க்கையில் அனைத்து வகையான தடைகளையும் நீக்கி மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா உலகம் ழுவதும் இன்று அதாவது மார்ச் 08, 2024 வெள்ளிக்கிழமை வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

மஹாசிவராத்திரி விழாவின் முக்கியத்துவம் இந்து மத நூல்களில் மட்டுமல்ல, ஜோதிடத்திலும் அதிகமாக விவரிக்கப்பட்டுள்ளது. கிரக தோஷங்கள் நீங்க அனைத்து ராசிக்காரர்களும் சிவபெருமானை வழிபடலாம். சிவ பக்தர்களை சனி பகவான் சோதிப்பதில்லை. குறிப்பாக மகாசிவராத்திரியில் சிவபெருமானை வணங்கினால் ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அவதியில் இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஜாதகத்தில் உள்ள அசுப விளைவுகள் நீங்க சிவ பூஜை கை கொடுக்கும்.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, தற்போது மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் ஏழரை சனியின் தாக்கம் உள்ளது. கடகம் மற்றும் விருச்சிக ராசிகளில் சனி தசையின் தாக்கம் உள்ளது. அனைத்து கிரகங்களுக்கும் கிரக நிலைகளுக்கும் அப்பாற்படவர் சிவன். மஹாசிவராத்திரி சுப நாளில் சில விசேஷ வழிமுறைகளைப் பின்பற்றி சிவனை வணங்கினால், சனியின் தோஷங்களில் இருந்து விடுபடலாம். அது பற்றி இங்கே காணலாம்.

சிவ பெருமானை மகிழ்வித்து, ஏழரை சனியில் நிவாரணம் பெற இவற்றால் சிவ லிங்க அபிஷேகம் செய்யலாம்:

​​’ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது சிவனின் மனதை குளிர வைக்கும்.

சிவபெருமானும் பால் கொண்டு அபிஷேகம் செய்தால் அவர் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். ஆகவே, ருத்ராபிஷேக நேரத்தில், சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்யும் முன்னர், பால் அபிஷேகம் செய்யவும். இப்படி செய்வதால் பல வகையான கிரக தோஷங்கள் நீங்கும்.

தயிர் அபிஷேகத்துக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. தயிர் அபிஷேகம் செல்வம், பணம், வருமானம் தொடர்பான விசேஷ பலன்களை அளிக்கும் என கருதப்படுகின்றது.

சிவபெருமானின் அலங்காரத்தில் சந்தனத்தின் பயன்பாடு மிக முக்கியமானது. இது கோவத்தில் ருத்ரனாக இருக்கும் அவரை சாந்தப்படுத்துகிறது.

அபிசேகத்திற்கு பிறகு சிவலிங்கத்தில் திருநீறு பூசி குங்குமம் இட்டு, வில்வ இலைகள், மலர்கள், ருத்ராட்ச மாலை கொண்டு அலங்கரித்து வழிபட்டால், சிவபெருமானின் விசேஷ பலனை பெறலாம்.

சில வட மாநில கோயில்களில் பக்தர்கள் தாமாக சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய அனுமதிப்பார்கள். எனினும், பல கோயிகளில் இந்த அனுமதி கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட கோயில்களில் பக்தர்கள் அபிஷேகம் மற்றும் அலங்காரத்திற்கு இந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தாலே அதற்கான புண்ணியத்தையும், பலனையும், சிவ பெருமானின் அருளையும் பெறலாம்.

மனிதர்களை பாடாய் படுத்தும் ஏழரை சனி பாதிப்புகளை தவிர்க்க, மகா சிவராத்திரியில் சிவ பெருமானை வழிபட்டால் போதும். அனைத்து அசுப தாக்கங்களும் பனி போல் விலகி சிவனருள் கிட்டி, நல்லது நடக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles