பிக் பாஸ் மதுமிதா சக போட்டியாளர்களை அசிங்கப்படுத்துவது போல டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மது ஏற்கனவே தன்னுடைய மன உளைச்சலுக்கு காரணம் வனிதா, ஷெரின், சாண்டி, கவின், அபிராமி, லொஸ்லியா ஆகியோர் தான் என வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மதுமிதா தனது டிவிட்டர் பக்கத்தில் அவர்கள் மனம் வருந்தி கேட்டுக்கொண்டதால் பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம் என டிவிட்டியுள்ளார்.
———–gang மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்…பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்😊🙏
— madhumitha moses (@madhumithamoses) October 11, 2019
கக்கூஸ் கேங் என்று சொல்லாமல் டேஷ் கேங் என டிவிட்டியிருக்கிறார். மதுமிதா இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், 8 பேரும் மன்னிப்பு கேட்டாங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதேவேளை, மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி பிரச்சினை குறித்து பேசியதால் சக போட்டியாளரின் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கையை கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து முக்கிய விதியை மீறியதாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
———–gang மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்…பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்😊🙏
— madhumitha moses (@madhumithamoses) October 11, 2019



