2024 Latest News Bigg Boss 8 Tamil Cofirmed Contestants List : தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி, பிக்பாஸ். 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இப்போது 8வது சீசனை எட்டியிருக்கிறது. 7வது சீசன் வரை இதனை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, விஜய் சேதுபதி இதற்கு புதிய தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் முழு பெயர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அவர்கள் யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்
VTV கணேஷ்

தயாரிப்பாளரும் நடிகருமான விடிவி கணேஷ், பிக்பாஸ் போட்டிக்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.
VJ விஷால்
பாக்கியலக்ஷ்மி தொடர் நடிகர் விஜே விஷால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

டி.எஸ்.கே
திரைப்பட நடிகரும், காமெடி நடிகருமான டி.எஸ்.கே, பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர், லப்பர் பந்து படத்தில் நடித்து மக்கள் மத்தியில் சமீபத்தில் கவனம் ஈர்த்தார்.

தர்ஷிகா
சீரியல் நடிகை தர்ஷிகா, பிக்பாஸில் கலந்து கொள்கிறார்.

சுனிதா
சின்னத்திரை பிரபலம் சுனிதா, பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சௌந்தர்யா நஞ்சுண்டன்
மாடலும், நடிகையுமான சௌந்தர்யா நஞ்சுண்டன், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம்.

சாச்னா (சஞ்சனா)
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு, மகளாக நடித்த சாச்னா (சஞ்சனா) இதில் கலந்து கொள்கிறாராம்.

பால் டப்பா
பாடகர் பால் டப்பா இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

கோகுல்நாத்
பன்முக திறமையாளர் கோகுல்நாத், இதில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர், மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

தர்ஷா குப்தா
கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அர்னவ்
சீரியல் நடிகை அர்னவ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாராம்.

அன்ஷிதா
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த அன்ஷிதா, இதில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அன்பு
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா பாஸ்கரன்
நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு வருகிறார்.




