விரைவில் ஹீரோயினாக களமிறங்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி!

விரைவில் ஹீரோயினாக களமிறங்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி!
விரைவில் ஹீரோயினாக களமிறங்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி!

நாம் எந்த நிறம் ஆனாலும் நிறத்தில் இல்லை அழகு, நம்மிடம் உள்ள தன்னம்பிக்கையில் தான் நம் நிறங்களில் அழகு உள்ளது என சின்னத்திரை நட்சத்திரம் சைத்ரா ரெட்டி கூறியுள்ளார். சர்வதேச தரத்திலான அழகுக்கலை நிபுணர் பயிற்சியை வழங்கும் லாக்மே அகாடமி கோவையின் புதிய கிளையை பிரபல சின்னத்திரை நட்சத்திரம் சைத்ரா ரெட்டி பங்கேற்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அழகு சாதனங்களைக் கையாளுதல் குறித்து சைத்ரா ரெட்டி பேசினார்.

தென்னிந்திய அளவில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள லாக்மே அகாடாமி பயிற்சி மையத்தில் அழகு சாதனங்களைக் கையாளுதல் – சிறப்பு சருமப் பராமரிப்பு, முடி அலங்காரம் மற்றும் பராமரிப்பு, ஒப்பனைக் கலை, நகங்கள் சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தல், உடல்நலன் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

அழகுக்கலையில் தலைசிறந்த பயிற்சியாளர்களுடன் செயல்படும் இந்த அகாடாமியில் பயிற்சி பெறுவோர் நவீன அழகுக்கலை மையங்கள், ஃபேஷன் போட்டோ – ஷூட் நிறுவனங்களில் மட்டுமின்றி – மணப்பெண் மற்றும் மணமகன் அலங்காரம், சினிமா, சின்னத்திரை மற்றும் சமூகவலைதளப் பிரபலங்களுக்கான தனித்துவ அலங்காரம் (செலிபிரிட்டி ஸ்டைலிஷ்ட் – மேக்அப் ஆர்டிஸ்ட்) மூலம் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

மேலும் தனக்கு மேக்கப் குறித்து பெரிதாக தெரியாது, ஆனால் என்னுடைய சருமத்திற்கு எது தேவைப்படுகிறதோ அதை சரியான முறையில் மேக்கப்பில் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். என்னுடைய சின்னத்திரை பயணம் நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் வெள்ளித் திரையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறினார். நாம் எந்த நிறத்தில் இருந்தாலும் அழகாய் இருப்போம் – நிறத்தில் இல்லை அழகு – அந்த நிறத்திற்கு ஏற்றவாறு சருமங்களில் நிலை அறிந்து மேக்கப்பின் மூலம் தங்களை மெருகேத்திக் கொண்டாலே போதுமானது மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் தானாகவே வந்துவிடும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

View this post on Instagram

A post shared by SunTV (@suntv)

சைத்ரா ரெட்டி கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். கன்னட தொலைக்காட்சித் துறையில் அவனு மாதே ஷ்ரவாணி சீரியலில் முதலி நடித்தார். 2014ல் ஷ்ரவாணியின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சைத்ரா. 2019ல் மகேஷ் கவுடா இயக்கிய கன்னடத் திரைப்படமான ரக்ட் படத்தில் அறிமுகமானார். 2021 முதல் தமிழில் கயல் சீரியலில் கயல் என்ற பாத்திரத்திற்காக அதிகமாக பேசப்பட்டார். கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2022ல், வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles