சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் படம் ரிலீஸ் ஆகிறது.
ஏற்கனவே இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்தால் சோக மயம் சூழ்ந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் 10க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ரஜினியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். போராட்ட நேரத்தில் அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்ட போஸ்டரால் சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் காலா படத்தின் தெலுங்கு பிரமோஷனை வரும் மே 29 ல் ஹைதராபாத்தில் Pre-Release மூலம் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.


