திருமணம் தாமதமாகிறதா? இந்த எளிய பரிகாரங்களை செய்யுங்கள்.. உடனே திருமணம் முடிவாகும்..!

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம் செய்து தன் பேரன், பேத்தி என தன்னுடைய தலை முறை வளர்வதைப் பார்க்க வேண்டும் என விரும்புவது உண்டு. ஆனால் பிள்ளையின் திருமணம் தடை அல்லது தாமதம் ஆவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது..அதை எந்த பெற்றோரும் ஒருபோதும் விரும்புவதில்லை.

திருமணம் தாமதமாகிறதா? இந்த எளிய பரிகாரங்களை செய்யுங்கள்.. உடனே திருமணம் முடிவாகும்..!
திருமணம் தாமதமாகிறதா? இந்த எளிய பரிகாரங்களை செய்யுங்கள்.. உடனே திருமணம் முடிவாகும்..!

அதனால் பெற்றோருக்கும், திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நல்ல வரன் அமைவது தாமதமாகாமல் இருக்க செய்ய வேண்டிய சில ஜோதிட பரிகாரங்கள் உள்ளன.. அவை என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

இந்த ஜோதிட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், திருமணத்தில் வரும் அனைத்து வகையான தடைகளும் நீங்கி, திருமண வாய்ப்புகள் உருவாகத் தொடங்குகின்றன. வீட்டில் மகள் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டதாகவும், எவ்வளவோ முயற்சி செய்தும் நல்ல உறவுமுறை கிடைக்காமல் போவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனை சரிச்செய்ய இதோ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

விரைவில் திருமணம் செய்ய எளிதான பரிகாரங்கள்

1. சுக்ல பக்ஷத்தின் முதல் வியாழன் அன்று, ஒரு ஜோடி ஏலக்காய்களுடன் 5 வகையான இனிப்புகள் மற்றும் சுத்தமான நெய் விளக்கு ஏற்றி தண்ணீர் வைத்து குருவை வணங்க வேண்டும்.. மூன்று வியாழக்கிழமைகள் இதைச் செய்யுங்கள். திருமணம் விரைவில் நடக்கும்.

2. சனி தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். நாம் செய்யக்கூடிய தான, தர்மங்கள், நற்செயல்கள் சனி தோஷத்தைப் போக்கக்கூடியதாக இருக்கும்.

3. அரச மரத்தின் வேருக்கு தண்ணீர் ஊற்றி, தொடர்ந்து 43 நாட்கள் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் விரைவில் நிச்சயிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடைசெய்யப்பட்ட காலங்களிலும் தண்ணீர் வழங்கக்கூடாது.

4. பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக, வியாழன் அன்று லக்ஷ்மி-நாராயணன் கோவிலுக்குச் சென்று, விஷ்ணுவுக்கு கல்கி அர்ச்சனை செய்து, நெய்யால் செய்யப்பட்ட ஐந்து லட்டுகளை சமர்ப்பித்து, அவர்களின் திருமணத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக, திருமணம் ஒரு வருடத்திற்குள் நடக்குமாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

5. ஆண், பெண் திருமணத்தில் தாமதம் ஏற்பட்டால், விரும்பிய வாழ்க்கைத் துணையைப் பெற, தினமும் காலையில் ஏதேனும் ஒரு விநாயகர் கோயிலுக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபடவும். இந்த பரிகாரத்தை 43 நாட்களுக்கு செய்யுங்கள்.

6. பெண்ணின் திருமணத்தில் தடைகள் இருந்தும், உறவுமுறை அமையவில்லை என்றால் திங்கட்கிழமை இல்லாமல் மற்ற நாட்களில் நாக விரதம் 21 நாடகளுக்கு இருக்க வேண்டும்.. அதாவது ராகு கேது குறித்த விரதம்.

7. திருமண தாமதத்திற்கு மிகச்சிறந்த்த பரிகாரமாக விளங்குவது, ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு முடிந்த அளவுக்கு நிதி, பொருள் உதவி செய்வது. தான, தர்ம விஷயங்கள் நம்முடைய தலைமுறையைக் காக்கும் என்பது ஐதீகம்.

8. திருமண தாமதம் நீங்கி விரைவில் திருமணம் நடக்க செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிக நல்ல பலனைத் தரும்.

9. பசுவிற்கு கீரை, புல் தீவனம் அளித்து திருமண யோகமும், நம் கர்ம வினையையும் தீர்த்துக் கொள்ளலாம். இதனால் திருமண தாமதம் விரைவாக தீரும்.

10. திருமண யோகத்தை வழங்கக்கூடியவர் குரு பகவான். திருமண வயதை அடைந்தவர்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடை அணிந்து திங்கட்கிழமைகளில் சிவனையும் பார்வதியையும் வழிபட்டால் திருமணம் உடனேயே நடக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles