குரு பகவானின் பிற்போக்கு இயக்கம் ஜோதிடத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும், அனைத்து ராசி அறிகுறிகளின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் பாதிக்கும் குருவின் வக்ர பெயர்ச்சியானது 9 அக்டோபர் தொடங்கி அடுத்த ஆண்டு அதாவது 2025 பிப்ரவரி 4ம் தேதி வரை கடிகார சுற்றுக்கு நேர் எதிர்திசையில் இருக்கும்.

சுமார் 119 நாட்கள் வக்ரகதியில் கோச்சாரத்தில் சஞ்சாரிக்கும் குரு சிலரின் குடும்பத்தில் எதிர்பார்த்த சுப காரியங்களை நடத்திக் கொடுப்பார், திருமண வாய்ப்புகள் கைகூடும் என்றால், சிலருக்கு குழந்தை பாக்கியம்த்தைக் கொடுப்பார். சிலரின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தினா, சிலருக்கு துணிவைக் கொடுப்பார்.
குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு திடீர் தனவரவு, திடீர் சுபச் செலவுகள் வந்தால், சிலருக்கு திடீரென உடல் நலம் குறையும். இப்படி குரு வக்ர இயக்கத்தில் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத காரியங்கள் நடைபெறும். ஒட்டுமொத்தமாக குருவின் வக்ர இயக்கத்தால் ஜாலியாக வாழப்போகும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
ரிஷபம்
உப்பு விற்கப் போய் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்றடிப்பதுமாக இருந்த நிலை மாறி, வாழ்க்கையில் நிம்மதி பெருகும். உணவு, தங்கும் விடுதி, கமிஷன் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் தான். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பழைய பாக்கிகளும் வசூலாகும்.
கடகம்
பிரச்னை தந்த கூட்டாளிகள் உங்களை விட்டு வெளியேறி நிம்மதியைக் கொடுப்பார்கள். சாதகமான பல நல்ல பலன்களை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பெரிய பதவியும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றால், தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த பணிகளை செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
அலுவலகத்தில் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும், நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
பிப்ரவரி 25 வரை இதே நிலையில் இருக்கும் குரு, மே மாதம் வரை ரிஷபத்திலேயே பயணித்து மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குச் செல்வார். அதுவரை இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் வாழ்வு சுபிட்சமாக இருக்கும்.



