ஆவணி மாத ராசி பலன் 2023 ஆவணி மாதம் சிம்ம மாதம். இந்த மாதத்தில் சூரியன் தனது ராசி வீடான சிம்ம ராசியில் பயணம் செய்வார். கூடவே புதன் இணைந்துள்ளார். 21 நாட்கள் புதன் வக்ரம் பெறுகிறார். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஆவணி மாத ராசி பலன் 2023
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்களுக்கு இது அற்புதமான மாதம் என்றாலும் உங்கள் ராசி நாதன் சுக்கிரன் ராசிக்கு பத்தாமிடத்தில் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் இணைந்து பயணம் செய்கின்றனர். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். ஆவணி 8ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் புதன் வக்ரமடைகிறார். அரசு துறை வேலைகளில் கவனம் தேவை. வேலையில் இருப்பவர்கள் கவனமும் நிதானமும் தேவை. இந்த மாதம் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. ஆவணி மாதத்தில் முதல் வாரத்தில் அற்புதங்கள் நடைபெறும். அலுவலகத்தில் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். புரமோசனும் கிடைக்கும். ஆவணி 8ஆம் தேதிக்கு மேல் புதன் வக்ரமடைவதால் முயற்சிகளில் தடை ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் புதனோடு பயணம் செய்கிறார். எட்டாம் வீட்டில் சுக்கிரன் வக்ரமடைந்துள்ளார். பண விசயங்களில் கவனம் தேவை. பெரிய அளவில் பண முதலீடுகளை செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.
முதல் எட்டுநாட்களுக்கு புதன் பகவான் சூரியனுடன் நேர்கதியில் பயணம் செய்வதால் ஆன்மீக பயணங்கள் செல்ல ஏற்ற காலம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். புதன் வக்ரமடையும் காலத்தில் நரம்பு பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. ராகு, குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வது அற்புதம். குரு பார்வையால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
மகரம்
ஆவணி மாதம் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் பயணம் செய்கிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரன் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். ஏழரை சனியில் பாத சனி நடைபெறுவதால் கவனம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். பணம் விசயத்தில் கவனம் தேவை. கையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம். வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் வக்ரம் பெற்றிருப்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம். சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவது பாதிப்புகளை குறைக்கும்.
கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் பயணம் செய்கின்றனர். தொட்டது துலங்கும். பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு கிடைக்கும். ஜென்ம ராசியில் சனிபகவான் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். குடும்ப விவகாரங்களில் கவனம் தேவைப்படும்.
புதன் வக்ரமடையும் கால கட்டத்தில் உங்களுக்கு பேசும் வார்த்தைகளில் கவனம் தேவைப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராடுவீர்கள். களத்திர ஸ்தானத்தில் புதன் வக்ரமடைவதால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். கிரகங்கள் வக்ரமடைவதால் பணம் விசயங்களில் யாரையும் நம்பக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கடன் வாங்காமல் தவிர்த்து விடுவது நல்லது.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே.. ஆவணி மாதத்தின் முதல் வாரத்தில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தகவல் தொடர்பு துறையில் பிரச்சினை ஏற்படும். சுப காரியங்களில் தடைகள் ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் வக்ரமடைந்து பயணம் செய்வதால் பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்