இன்சுலினே தேவையில்லை… ரத்த சர்க்கரைக்கு எமனாகும் சில மூலிகைகள்

இன்சுலினே தேவையில்லை... ரத்த சர்க்கரைக்கு எமனாகும் சில மூலிகைகள்
இன்சுலினே தேவையில்லை… ரத்த சர்க்கரைக்கு எமனாகும் சில மூலிகைகள்

நீரழிவு நோய் என்பது, இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான உடல்நல பிரச்சனையாக மாறிவிட்டது. முன்பெல்லாம், அரிதாகவே இரத்த சர்க்கரை நோய் இருக்கும் நபர்கள் காணப்படுவார்கள். ஆனால் இன்றைய தேதியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாரபட்சம் ஏதும் இன்றி, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

நீரழிவு நோய் வந்துவிட்டால், நம் வாழ்நாள் முழுவதும் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் இருந்தால், அதனால் சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, இதய நோய்கள் என பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

இன்சுலின் என்றால் என்ன

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது, நம் உடலில், உணவு ஆற்றலாக மாறாமல், ரத்தத்தில் சர்க்கரையாக சேர்கிறது. செரிமான சுரப்பிகளில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, சில மூலிகைகள் கை கொடுக்கும்.

இன்சுலின் செடி

இன்சுலின் செடி என்னும் பெயர் கொண்ட இந்த செடியில் இன்சுலின் இல்லை என்றாலும், நம் உடலில் இன்சுலின் போல் செயல்பட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தும். மேலும் இது இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுவதால், இது இன்சுலின் செடி என்று அழைக்கப்படுகிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு இன்சுலின் செடி இலைகளை மென்று சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை கிளைக்கோஜனாக மாற்றும் சக்தி கொண்ட சில நொதிகள் இதில் காணப்படுவதே இதற்கு காரணம்.

இன்சுலின் செடியின் இலைகளை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தும் முறை

இன்சுலின் செடியின் இலைகளை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் சிறிதளவு சாப்பிடுவதும் நல்ல பலன் கொடுக்கும்.

நித்திய கல்யாணி

கணையத்தில் இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ஆற்றலை கொண்ட, நித்யகல்யாணியின் அருமை தெரியாமல், நாம் அதை அழகுச் செடி என்று வளர்த்து வருகிறோம். பாரம்பரிய மருத்துவத்தில், நித்திய கல்யாணி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் இதன் மருத்துவ பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை தூண்டும் ரசாயனங்களான, வின்கமைண், அல்கோலைட்ஸ், விண்பிளாஸ்டின் போன்றவை இதில் உள்ளது. இதனால் நித்திய கல்யாணி இலை மற்றும் பூவை, தினமும் சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு கணையத்தின் பீட்டா செல்களும் வலுப்பெறும்.

நித்திய கல்யாணி மருந்தாக பயன்படுத்தும் முறை

நித்திய கல்யாணி பூவின் சாறு, நீரழிவு நோய்க்கு அருமருந்தாகும். இதன் மூலம் கணைய செல்களில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நித்திய கல்யாணி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மூலிகை தேநீராக காலையில் உட்கொள்வது, ரத்த சர்க்கரைக்கு அருமருந்து. பூக்களுக்கு பதிலாக இலைகளையும் போட்டு தேனீர் அருந்தி குடிக்கலாம். இந்த செடியின் பூக்கள் மற்றும் இலைகளை பறித்து மென்று சாப்பிடுவதும் பலனளிக்கும். இலை மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தயாரித்து, அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து பயன்படுத்தலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles