
உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் இயற்கையான வழியில் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க ஒரு எளிய வழியை இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைப்பது அத்தனை எளிய காரியம் அல்ல. எனினும், இயற்கையான வழிகளில் இதை செய்வது நல்லது. இல்லையென்றால் பல வித பக்க விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
உடல் எடையை குறைக்க தினமும் உட்கொள்ள வேண்டிய சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்
ஓம நீரில் கொழுப்பை குறைத்து, கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்கும் பல வித சேர்மன்கள் உள்ளன. இதை உட்கொள்வதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
எலுமிச்சை நீரை உட்கொள்வது எடையை விரைவாகக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எலுமிச்சை நீரில் பெக்டின் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக நிறைந்துள்ளன. இது தொப்பை கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க, வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கலாம்.
தினமும் காலையில் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால் பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி இது உடலில் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இஞ்சியில் உள்ள விசேஷ குணங்கள் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரித்து கொழுப்பை குறைக்க உதவுகிறது. தினமும் இஞ்சி நீர் பருகி வந்தால், உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
மஞ்சளில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.



