12 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் புதன்-குரு சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் புதன்-குரு சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள்
12 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் புதன்-குரு சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள்

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரகங்கள் ராசிகளை மாற்றும்போது சில சமயங்களில் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றது. இந்த சேர்க்கையால் பல வித ராஜயோகங்கள் உருவாகின்றன.

ராசி மாற்றங்களால் ஏற்பட்டும் கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படுகின்றன. மார்ச் 26 அன்று புதன் மற்றும் குரு பகவானின் சேர்க்கை நடக்கவுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டு கிரகங்களும் மேஷ ராசியில் ஒன்றாக இணையவுள்ளன. புத்திக்கூர்மை, அறிவாற்றல், பேச்சுத்திறமை ஆகியவற்றின் காரணி கிரகமான புதனும், அறிவாற்றல், திருமண வாழ்க்கை, குழந்தைகள், செல்வம், குடும்பம் ஆகியவற்றின் காரணி கிரகமான குருவும் இணைவதால் அபூர்வமான ராஜயோகம் உருவாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மிதுனம்

மேஷ ராசியில் புதன் மற்றும் குரு இணைவது மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பல வழிகளில் பண வரவு இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாகவும் ஆதரவாகவும் இருக்கும். பல வழிகளில் வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் பல பொன்னான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் லாபம் காண முடியும்.

கடகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கடக ராசியின் கர்ம வீட்டில் இந்த கிரகங்களின் சேர்க்கை உருவாக உள்ளது. ஆகையால் வேலை அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த நேரத்தில் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். உங்கள் பணியிடம், வீடு என அனைத்து இடங்களிலும் பாராட்டுதல்களை பெறுவீர்கள். இந்த நேரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்

துலா ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் புதன் சேர்க்கை சாதகமான பலன்களை அளிக்கும், இந்த நேரத்தில் திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் அதிகரிக்கும். உறவுகளில் இனிமை இருக்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண நெருக்கடியால் இத்தனை நாட்களாக பிரச்சனையில் இருந்தவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். பண லாபம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.

சிம்மம்

குரு புதன் சேர்க்கையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல வித நல்ல செய்திகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வெற்றி உண்டாகும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் மதிப்பும்., மரியாதையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles