நவம்பர் மாத முழு ராசிபலன்: தீபாவளி மாதம் இவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்…

இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. ஜோதிட ரீதியாக இந்த மாதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் தீபாவளி பண்டிகை வருவதோடு, தீபாவளிக்கு சில நாட்களுக்கு பிறகு சனி வக்ர நிவர்த்தி நடக்கவுள்ளது.

நவம்பர் மாத முழு ராசிபலன்: தீபாவளி மாதம் இவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்...
நவம்பர் மாத முழு ராசிபலன்: தீபாவளி மாதம் இவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்…

இப்படிப்பட்ட நிலையில் நவம்பர் மாதத்தில் ஷஷ ராஜயோகம் தவிர நீச்சபங்கம், நவபஞ்சம் ராஜயோகம், தனலக்ஷ்மி ராஜயோகம், லக்ஷ்மி நாராயண ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம் ஆகியவையும் உண்டாகும். இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை நவம்பர் மாத ராசிபலனை இங்கே காணலாம்.

மேஷம்:

இந்த மாதம் மேஷராசிக்காரர்களுக்கு  உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்களை முன்னெடுத்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். இருப்பினும், உறவுகளில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிறரிடம் பேசும்போது தெளிவாக பேச வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

ரிஷபம்:

நவம்பர்  மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சிறப்பான நேரத்தை செலவிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும். இருப்பினும், நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும். பழைய முதலீடுகளில் லாபம் கூடும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், குறிப்பாக உங்கள் உணவில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சனி பகவானின் ஷஷ யோகம் அதிக நன்மைகளை அளிக்கும்.

மிதுனம்:

இந்த மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு  புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கும். உங்கள் யோசனைகள் மற்றும் படைப்பாற்றல் பாராட்டப்படும். புதிய திட்டத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனினும், எந்த வித முயற்சியை எடுக்கும் முன்னரும் சற்று நிதானமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்:

நவம்பர் மாதம் கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படும்படியான சூழல் அமையலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சவால்கள் இருக்கலாம், ஆனால் பொறுமையுடனும் கடின உழைப்புடனும் அனைத்தையும் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். கடின உழைப்புக்கான பாராட்டு கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மன அமைதியை தரும். நிதி நிலைமை மேம்படும். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர்  மாதம் சமநிலையான மாதமாக இருக்கும். உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலை பராமரிக்கப்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள இந்த மாதம் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்கவும், புதிய முதலீடுகளை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுவது நன்மை தரும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், குறிப்பாக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்:

இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். சில புதிய திட்டங்களின் மூலம் உங்களை பிஸியாக வைத்துக்கொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை மேம்படும். இந்த மாதம் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதிய தொடக்கத்திற்கான அறிகுறிகள் உள்ளன. பயண வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உங்கள் தொழிலில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாதம் நிதி நிலை மேம்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.

மகரம்:

மகர ராசிக்கு நவம்பர் மாதம் சுயபரிசோதனை செய்யும் மாதமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சில பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் சவால்கள் இருக்கும். ஆனால் அவற்றை உங்கள் அனுபவத்தால் வெற்றியுடன் கையாளுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இந்த நேரம் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

கும்பம்:

நவம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். ஆனால் பழைய விஷயங்களில் கவனம் தேவை. பண விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சனி பகவானின் வக்ர நிவர்த்தி பல நன்மைகளை அளிக்கும்.

மீனம்:

இந்த மாதம், மீன ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். எனினும் சேமிப்பில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையில் அன்பும் ஒத்துழைப்பும் நிலைத்திருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து, தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles