குரு உதயம்: ஜூன் 6 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், வீட்டில் சுபீட்சம் கூடும்

குரு உதயம்: ஜூன் 6 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், வீட்டில் சுபீட்சம் கூடும்
குரு உதயம்: ஜூன் 6 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், வீட்டில் சுபீட்சம் கூடும்

மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். அதன் பிறகு அவர் மே 7 ஆம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமித்தார். 30 நாட்கள் அமைஸ்தமன நிலையில் இருக்கும் குரு பகவான் ஜூன் 6 ஆம் தேதி அதே ராசியில் உதயமாவார். குரு உதயமானது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை  பற்றி இந்த பதிவில் காணலாம்.

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த அனைத்து மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

பல வித நன்மைகளை அளிக்கும் சுப கிரகமாக குரு பகவான் பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு அசைவும் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். அதன் பிறகு அவர் மே 7 ஆம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமித்தார். 30 நாட்கள் அமைஸ்தமன நிலையில் இருக்கும் குரு பகவான் ஜூன் 6 ஆம் தேதி அதே ராசியில் உதயமாவார்.

குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம்:

குரு பகவான் தற்போது ரிஷப ராசியில்தான் உள்ளார். அவர் ரிஷபத்திலான் உதயமாகவுள்ளார். ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தருவார். இவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களின் வியாபாரம் விரிவடையும். உங்கள் நிதி நிலை மேம்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு குரு உதயம் சுப பலன்களைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். இது வரை இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் இருந்த பணிகள் நடந்து முடியும். உங்கள் நிதி நிலை மேம்படும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

சிம்மம்:

குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தால் சிம்ம ராசிக்காரர்களின் பழைய பிரச்சனைகள் தீரும். குறிப்பாக வேலையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரம் நன்றாக நடக்கும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள்.

விருச்சிகம்:

குரு உதயம் விருச்சிக ராசியினருக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். சில முக்கியமான வேலைகள் வெற்றிகரமான நடந்து முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த இதுவே சரியான நேரம். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்க அதிக வாய்ப்புகளும் உள்ளன. திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் செழிப்பு இருக்கும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும்.

குரு பகவானின் அருள் பெற, ‘குரவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகினாம் நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles