
ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும், இந்த 5 பொருட்களை மட்டும் யாரிடமும் இலவசமாக வாங்கிவிட கூடாதாம்.வாஸ்துசாஸ்திரத்தின் படி உப்பு சனியுடன் தொடர்புடையது. எனவே யாரிடமும் இலவசமாக உப்பை வாங்காதீர்கள். இதனால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினருக்கோ உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள், நிதி பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கர்சீப் அதாவது கைக்குட்டையை யாரிடமும் இலவசமாக வாங்க வேண்டாம். இது உங்கள் நிதி சிக்கலை அதிகரிக்கும். மேலும் அவர்களுடனான உறவு முறிவுக்கு வழிவகுக்கும்.
இரும்பு பொருள் சனியுடன் தொடர்புடையது என்பதால், யாரிடமும் இலவசமாக பெறவேண்டாம். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் வரலாம். மேலும் செலவுகள் அதிகரிக்கும்.
ஊசியை யாரிடமும் இலவசமாக வாங்க வேண்டாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்கள் ஊடுறுவும். மேலும், உங்கள் திருமண வாழ்க்கையை கெடுத்து, கெட்ட காலம் சூழ்ந்துவிடும்.
எண்ணெய்யும் சனியுடன் தொடர்புடையதால் யாரிடமும் அதை இலவசமாக வாங்க வேண்டாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும். மேலும் சில சொந்தங்களின் உறவு முறிவுக்கு வழிவகுக்கும்.



