மெட்ராஸ் டாக்கீஸ், லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் . விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், டயானா எரப்பா உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்‘.கேங்ஸ்டர் குடும்பம், காட்ஃபாதராக சேனாபதி(பிரகாஷ் ராஜ்), சேனாபதியையும் அவரது மனைவியையும் கொலை செய்ய முயற்சிக்கிறது மர்ம கும்பல்.

செக்கச் சிவந்த வானம் – விமர்சனம் CHEKKA CHIVANTHA VAANAM MOVIE REVIEW

இருவரும் மருத்துவமனையில் இருக்க அப்பாவின் இடத்திற்கு மூன்று மகன்களுமான வரதராஜன்(அரவிந்த சாமி), தியாகராஜன் (அருண் விஜய்), எத்திராஜ்(சிலம்பரசன்) போட்டியிடுகிறார்கள். போட்டி ஒரு கட்டத்தில் சண்டையாகி பகையாக உருவாகிறது. முடிவு என்ன என்பது பரபர , சேஸிங் கிளைமாக்ஸ். கேரக்டர் அறிமுகம், சேஸிங், செர்பியா, துபாய் ஷேக் என முன்பாதி மாஸ் கிளாஸ் ஸ்பீட் திரைக்கதை. அதிலும் விஜய் சேதுபதி அறிமுகமானதும் படத்தின் டோன் அப்படியே மாறி நக்கல், அசால்ட், கெத்து காட்டுகிறது. மனுஷன் என்னமா நடிக்கிறாரு. ‘என் அக்காவைப் பத்தி தப்பா பேசாதடா என் அக்கா சுமாராதான் , இருக்கும்னு சொன்னேன் சார் அவன் கேட்கலை‘,‘அவ்ளோதான் வீடு முடின்சு‘ இப்படி படம் நெடுக சீட்டில் நிமிர்ந்து உட்காரச் செய்கிறார். ‘ நான் வரணுமா’, ‘என் கிட்ட என்னம்மா இருக்கு, ஒரு மொபைல், அண்ணனோட கள்ளக்காதலி‘ வேற என்ன இருக்கு’ இப்படி விஜய் சேதுபதிக்கு சாவால் விடுகிறார் சிம்பு. படத்தின் மாஸ் ஓபனிங்க் இவர்கள் இருவருக்கும்தான் என அறிந்ததாலோ என்னவோ மணிரத்னம் இருவரின் கேரக்டர்களையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.

ஆனால் அதுவே மணிரத்னம் ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றலாம். காரணம் ரஜினிகாந்த் , கமல் ஹாசனையே தன்னுடைய படத்தின் பாத்திரத்திற்கு மாற்றிய மணிரத்னம் இதில் ஏன் விஜய் சேதுபதியை அவர் போக்கிலேயே விட்டுவிட்டார் என்ற கேள்வி எழுகிறது, அவர் மீதான நம்பிக்கையா அல்லது மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற சந்தேகமா அவருக்கே வெளிச்சம்.

அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஷ்வர்யா ராஜேஷ் , அதிதி ராவ், தியாகராஜன், என ஒவ்வொருவரும் தன் இருப்பை முடிந்தவரை காட்டி ஜொலிக்கிறார்கள்.டத்திற்கு இன்னொரு ஸ்பெஷல் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, முக்கியமாக செர்பியா, துபாய் காட்சிகள், பாடல் காட்சிகள் என கண்களுக்கு விருந்து. இசையில் பழைய புயல் இல்லை என்றாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்பெஷல் ‘மழை குருவி’ ‘கள்ளக் களவானி‘ பாடல்கள் காதில் கீச்சிடுகின்றன. பின்னணி அதிரடி ரகம், சோகக் காட்சிகளில் இரண்டு நிமிட பாடல்களாகவே போட்டு மனதைக் கனமாக்கியிருக்கிறார்.

இரண்டாம் பாதி ஆரம்பிக்கும் போதே துப்பாக்கி சண்டை, சேஸிங், ஓட்டம் என ஆரம்பித்தாலும், இடையில் கொஞ்சம் தொங்கிவிடுகிறது. ஹீரோக்கள் பேசும் வசனங்களும் பெரிதாக எடுபடாமல் நிற்கின்றன. என்னதான் செய்யப் போகிறார்கள் என நினைக்கையில் மாஸ் கிளைமாக்ஸ் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி பின்மண்டையில் சட்டென அடிக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் நிச்சயம் ‘ஓமை காட்‘ ‘உச்‘, ‘ஐய்யயோ‘, இப்படியான ஆடியன்ஸ் ரியாக்‌ஷன்களைக் கேட்கலாம். மொத்தத்தில் இத்தனை ஹீரோக்களை வைத்து மணிரத்னம் என்ன செய்யப் போகிறார் என்றக் கேள்விக்காகவே படத்தை பார்க்கலாம். அதற்கேற்ப மாஸ் கிளைமாக்ஸ் காட்டி எண்ட் கார்டு போட்டப்பிறகும் சீட்டில் அமரச் செய்திருக்கிறது ‘செக்கச் சிவந்த வானம்‘.

TIMES OF INDIA 3.5/5

BEHINDWOODS REVIEW BOARD RATING 3.0 / 5.0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here