பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிய போகிறது. ஒரு பக்கம் வருத்தம் என்றாலும் வெற்றியாளர் யார் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றையும் சரியாக கவனித்து, நேர்மையாக நடந்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ரித்விகா. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாக்கு எண்ணிக்கையில் கூட ரித்விகா மற்றவர்களை விட அதிக வாக்கு எண்ணிக்கையில் இருந்தார்.
அவர்தான் பிக்பாஸ் 2வது சீசன் டைட்டிலை பெறுவார் என்று மக்கள் நினைத்து வருகின்றனர். தற்போது இந்த பிக்பாஸ் 2வது சீசனின் டைட்டிலை ரித்விகா பெற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.



