வனிதா தன் குழந்தை ஜோவித்தாவை கடத்தி சென்றதாக அவரது இரண்டாவது கணவர் ஆனந்த் ராஜ் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் பிக்பாஸ் இல்லத்திற்கு நேற்று முன்தினம் சென்ற தெலுங்கானா போலீஸ், மனித உரிமை ஆணைய அதிகாரி மற்றும் நசரத்பேட்டை போலீசார் வனிதாவை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஜோவித்தாவிடம் நடத்திய விசாரணையில், தன் அம்மாவுடன் இருக்கவே விருப்பம் என தெரிவித்தார்.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில், வனிதா பொலிசார் நடத்திய விசாரணை பற்றி ரேஷ்மாவிடம் பகிர்ந்து கொள்கிறார், கண்ணீருடன் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் வனிதா.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day11 #Promo3 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/wBN38qFD5A
— Vijay Television (@vijaytelevision) July 4, 2019


