#BiggBoss8 சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. இது தான் பெரும்பாலானவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணம்.
பிக்பாஸ் BiggBoss Season 18
பிரபல தொலைக்காடயில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த சீசன் வின்னராக வைல்ட் கார்ட்டு மூலம் என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார்.
பிக்பாஸ் 8 ஆவது சீசன் இன்று ஆரம்பிக்கவிருக்கின்றது. அதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கின்றார்.
இந்நிலையில் தற்போது ஹிந்தியில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் 18வது சீசன் ஆரம்பிக்கும் போதே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த ஷோவும் இன்று தான் ஆரம்பமாகவிருக்கின்றது. ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசனில் போட்டியாளர்களாக பல்வேறு பிரபலங்கள் வருகிறார்கள்.
அவர்கள் உடன் ஒரு கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகின்றதாம். பிரபல advocate Gunaratna Sadavarte என்பவர் போட்டியாளராக தெரிவாகியுள்ள நிலையில், அவர் வளர்ந்து வரும் pet ஆன இந்த கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Max என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த கழுதை போட்டியாளர்கள் உடன் தான் அங்கு தங்கி இருக்க போகின்றது என்ற தகவல் வெளியாகி சர்சையை கிளப்பியுள்ளது.
தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நாளில் பிக் பாஸ் ஷோ தொடங்க இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Bigg Boss shuru hone se pehle hi aa gaya ek twist. Kya yeh donkey bhi hai in the participant list? 🫏 🤔
Watch #BiggBoss18 Grand Premiere 6 October raat 9 baje on @ColorsTV and #JioCinema#BB18 #BiggBoss18onJioCinema #BiggBoss18 #BiggBoss @BeingSalmanKhan pic.twitter.com/lRvR2ljXjT
— JioCinema (@JioCinema) October 4, 2024



