பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல கொலைகளும், ஆவிகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகின்றது. டாஸ்க் என்ற பெயரில் அரங்கேறும் கொமடிகளை அவதானிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை என்றே கூறலாம்.

இன்று காலையில் வெளியான ப்ரொமோ காட்சியில் சேரன், மீரா சண்டையில் ஆரம்பித்தது. தற்போது இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஷெரின், ரேஷ்மா கொலைசெய்யப்பட்டு ஆவியாக அழைந்து கொண்டிருக்கின்றனர்.

ஷெரின் மீது அளவுகடந்த காதல் கொண்ட தர்ஷன் அவரை மறக்க முடியாமல் தவிக்கும் காட்சி தற்போது வெளிவந்துள்ளது. லொஸ்லியாவிற்கு அடுத்தபடியாக தர்ஷனுக்கு ரசிகர் பட்டாளம் அதிகமே… கடந்த வாரம் வெளியேறிய பாத்திமா பாபு இவர்கள் இருவரில் ஒருவர் வெற்றியாளராக வருவார்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரொமோ காட்சியில் சாக்ஷி இறந்ததைக் குறித்து மதுமிதா பேசுகிறார். சாக்ஷி உண்மையாக கவினை காதலிக்கவில்லை… இது கவினுக்கே தெரியாது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here