BB 7 Title Winner: பிக்பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கப்போவது யார்? கணிப்பு இதுதான்!

Bigg Boss 7 Tamil Title Winner: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியில், இறுதிக்கட்டம் நெருங்கி வரும் நிலையில் கப்பை தூக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

BB 7 Title Winner: பிக்பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கப்போவது யார்? கணிப்பு இதுதான்!
BB 7 Title Winner: பிக்பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கப்போவது யார்? கணிப்பு இதுதான்!

ஆங்கிலத்தில் ஹிட் ஆன நிகழ்ச்சி, பிக் பிரதர். இந்த நிகழ்ச்சியை 2007ஆம் ஆண்டில் இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஆரம்பித்தனர். அதே போல தமிழ் உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கப்பட்டது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளர்கள், பலர் போட்டியின் பாதியிலேயே எவிக்ட் ஆகிவிட்டனர். இறுதிப்போட்டிக்கு 5 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். மாயா, அர்ச்சனா, மணிச்சந்திரா, விஷ்ணு விஜய் மற்றும் தினேஷ் ஆகியோர்தான் அந்த 5 போட்டியாளர்கள்.

நடன கலைஞரான மணிச்சந்திரா, இப்போட்டியில் ரவீனாவுடன் அதிக நேரம் செலவிட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்னர் ரவீனா எவிக்ட் ஆனார். அதன் பிறகு அவர் டாப் 5 இறுதி போட்டியாளர்களுள் ஒருவராக மாறினார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல கணக்கெடுப்புகளை நடத்தினர். அதில், மணிக்கு டைட்டில் அடிக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் போட்டியில் ஆரம்பத்திலிருந்தே மக்கள் மத்தியி கவனம் ஈர்த்த ஒருவர், மாயா. துணை நடிகையான இவர், கமலுடன் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த போட்டியில் இவர் புல்லி செய்தார், க்ரூப் கேம் ஆடினார் என பலவாறாக பல விமர்சனங்களை இவர் மீது முன்வைத்தனர். ஆனால், கடைசி வரை தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருந்த போட்டியாளர் இவர். ஆரம்பத்தில் நெகடிவாக வந்த கமெண்டுகள், பின்னர் பாசிடிவாக மாறியது. டைட்டிலை தூக்க, இவருக்கும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸிற்குள் நுழைந்தவர், தினேஷ். சீரியல் நடிகரான இவர், நன்றாக விளையாடியதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இவர் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் விரும்பினாலும், இவருக்கு அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

ஆஃபிஸ் தொடர் மூலம் பிரபலமான விஷ்ணு விஜய், பிக்பாஸ் போட்டியின் முக்கிய போட்டியாளராக உள்ளார். இவர், இந்த சீசன் டைட்டில் வெல்ல பெரிதும் வாய்ப்பில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராஜா ராணி 2 தொடரில், வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், வி.ஜே அர்ச்சனா. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வைல்டு கார்ட் எண்ட்ரியாக நுழைந்தார். வந்த முதல் வாரத்திலேயே மக்களின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது டாப் 5 போட்டியாளர்களும் முக்கியமானவராக உள்ளார். இவர், மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளதாகவும், இவர் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles