பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன சரவண விக்ரம்! மொத்தம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட சரவண விக்ரம், நேற்று எவிக்ட் செய்யப்பட்டார்.

பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன சரவண விக்ரம்! மொத்தம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?  title=

பிக்பாஸ் சீசன் 7:

தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. ஆங்கிலத்தில் பிக்பிரதர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அதைவைத்துதான் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களுக்கு தெரிந்து சின்னத்திரை-பெரிய திரை நடிகர்கள் மட்டுமன்றி, பல டிஜிட்டல் முகங்களையும் போட்டியாளர்களாக களமிறக்கினர். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகர் சரவண விக்ரமும் இதில் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார்.

சரவண விக்ரம்..

சின்னத்திரை நடிகர் சரவண விக்ரமிற்கு, நடிக்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசை இருந்தது. இதனால், முன்னணி நடிகர்கள் பேசும் டைலாக்கை ரீ-கிரியேட் செய்து வீடியோவாக வெளியிட ஆரம்பித்தார். இது, அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டுத்தது. இந்த தொடரில் அவர் பல அண்ணன்களுக்கு இளைய தம்பியாக ‘கண்ணன்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சரவண விக்ரம், பிக்பாஸ் போட்டியாளராக நுழைந்த போது அவர் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தது. போட்டிக்குள் நுழைந்த முதல் வாரத்தில் அசட்டுத்தனமாக காமெடி செய்து கொண்டு இருந்த இவர், அடுத்த வாரத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த வாரம், இவர் பிக்பாஸ் வீட்டையும் போட்டியாளர்களையும் சரியாக நிர்வாகிக்காததால் வார இறுதியில் கமலின் அதிருப்தியை சம்பாதித்தார். இதையடுத்து, அவருக்கு ஸ்கிரீன் டைமும் குறைவாகவே கொடுக்கப்பட்டது. பெரிதாக ரசிகர்கள் மத்தியில் தெரியாமல் இருந்தார். இதையடுத்து, “பிக்பாஸ் டைட்டில் வின்னர் சரவண விக்ரம்” என இவருக்கு இவரே மிமிக்கிரி செய்து கூறிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

எவிக்ட் செய்யப்பட்டார்…

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் நெருங்கி வருகிறது. இதையடுத்து, வாரா வாரம் டபுள் எவிக்ஷன் நடைப்பெற்று வருகிறது. கடந்த வாரம் மிட் வீக் எவிக்ஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். இதையடுத்து வீட்டில் இருந்து தப்பிக்கப்பார்த்த கூல் சுரேஷ், வார இறுதியில் எவிக்ட் ஆனார். அந்த வகையில், இந்த வாரம் இத்தனை நாட்களாக மக்களின் ஆதரவை பெற்று வந்த சரவண விக்ரம் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

வாங்கிய சம்பளம்..

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்குமே ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அப்படி, சரவண விக்ரமிற்கும் ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாம். இவர், பிக்பாஸ் 7 வீட்டில் 80 நாளைக்கு மேல் இருந்துள்ளார். இதனால் இவருக்கு சுமார் 14 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பலமான போட்டியாளர்கள்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பலமான போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். அர்ச்சனா, பூர்ணிமா, மாயா, விஜய் வர்மா, விசித்ரா ஆகியோரே அந்த பலமான போட்டியாளர்கள். இவர்களில் யாரேனும் 5 பேர்தான் இறுதி கட்டத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles