மிகப் பிரபலமான பிக்பாஸ் தமிழ் சீசன் 3 சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
முதல் போட்டியாளராக செய்திவாசிப்பாளரும் திரைநட்சத்திரமுமான ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இரண்டாவது போட்டியாளராக ஈழத்து பெண் அதிரடியாக செய்தி வாசித்து நிகழ்ச்சிக்குள் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரும் ஒரு செய்திவாசிப்பாளர்.
அது மாத்திரம் இல்லை, நடிகர் கமலிடம் தென்னாலிராமன் படத்தில் எவ்வாறு எங்களுடைய யாழ்ப்பாண தமிழை சாதாரணமாக உரையாடியுள்ளீர்கள். இப்போது அது போல உரையாட முடியுமா என்று வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் கமலும் அதிரடியாக இலங்கை மொழியில் பேசி ஒட்டுமொத்த அரங்கத்திற்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும், மூன்றாவது போட்டியாளராக சாக்ஷி அகர்வாலும், நான்காவது போட்டியாளராக ஜாங்கிரி மதுமிதாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.