Thursday, March 20, 2025

ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது…

- Advertisement -
ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது…

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஆகஸ்ட் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.

உங்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2024 ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மேஷம்

- Advertisement -

மேஷ ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது எப்படி என்பதை பற்றி சிந்தித்து, அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இம்மாதத்தில் பணத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்காதீர்கள். உங்கள் உண்மையான வளர்ச்சியில் கவனத்தை செலுத்து அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது காதலருடன் பிரச்சனையை சந்திக்க நேரிடும். எந்த ஒரு செயலை செய்யும் முன்னும் நன்கு யோசித்து, அதன் பின் செய்ய வேண்டும். இம்மாதத்தில் மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் விரும்பும் அனைத்தும் நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடினமாக உழைத்தால் அதற்கான பலனைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், போக போக அந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் மனதில் காதல் பூக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் மாற்றங்களை சந்திப்பீர்கள். அதேப் போல் உடல் மற்றும் உணர்ச்சிகளில் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். ஆனால் இவற்றில் சமநிலையை பராமரிப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உதவி செய்ய அதிகம் விரும்புவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதலைப் பொறுத்தவரை இம்மாதம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சியில் தவறாமல் ஈடுபடுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் நடத்தைகளை கவனித்து, அதை சரிசெய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் பழைய கடனை அடைக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இம்மாதத்தில் உங்கள் துணையுடன் இருந்த பிரச்சனையை பேசி தீர்க்க முயற்சி செய்வது நல்லது. கடந்த கால பிரச்சனைகளை மறந்து விடுவது நல்லது. இல்லாவிட்டால், அந்த நினைவுகளே உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்க தியானம் செய்வது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு ஏமாற்றங்களைத் தரும் அல்லது பிரச்சனைகளைத் தரும் மாதமாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு யாரேனும் துரோகம் செய்யலாம். வாழ்க்கைத் துணை அல்லது காதலருடன் பிரிவு ஏற்படலாம். இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இம்மாதத்தில் தொழிலில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காதீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சுமாராகவே இருக்கும். இம்மாதத்தில் நீங்கள் சுயநலமாக நடந்து கொள்ளலாம். காதல் வாழ்க்கைப் பொறுத்தவரை, மனதில் ஒருவித பயம் இருக்கும். தொழில் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. மனம் எப்போதும் ஒருவித அமைதியை இழந்து இருக்கும். உங்களின் உணர்வுகளை கவனித்து சூழ்நிலைக்கேற்ப அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மாதமாக இருக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் திறன் இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும். பிடிக்காத உறவு முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது. அதேப் போல் நீங்கள் செய்யும் வேலை பிடிக்காவிட்டால், அவற்றை விடுவதற்கு இம்மாதத்தில் முடிவெடுக்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் பல சாதகமான மாற்றங்களை சந்திப்பீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், இம்மாதத்தில் அந்நோயில் இருந்து விடுபடுவீர்கள். மொத்தத்தில் இம்மாதம் மாற்றங்கள் நிறைந்த ஒரு மாதமாக இருக்கும். இருப்பினும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமான பலனைத் தரும். தவறான முடிவுகள் வாழ்நாள் முழுவதும் அவதிப்பட வைக்கும். இம்மாதத்தில் எந்த ஒரு விஷயங்களை கையாளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் அலட்சியம் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளுக்கு உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகள் மோசமாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் பல சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். ஒரு விஷயத்திற்கு முடிவெடுக்கும் போது, அதை பகுத்தறிந்து பின் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் புறக்கணித்தால், அதற்கான விளைவுகளை சந்திப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேணடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் காலமாகும். இம்மாதத்தில் ஆசைகள் அதிகரிக்கும். அதிகப்படியான மன அழுத்தம் உங்கள் தொழில் வாழக்கையை மட்டுமன்றி, தனிப்பபட்ட வாக்கையிலும் பிரச்சனைகளைக் கொண்டு வரும். நிதி நிலை வலுவாக இருக்கும். இம்மாதத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும், அதை நேர்மறையாக எடுத்து கொள்ளுங்கள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link