அமீர்-பாவனி திருமணம் எப்போது? அவர்களே சொன்ன தகவல்!

தமிழ் திரைத்துறையில் நடன இயக்குநராக இருப்பவர், அமீர். இவரும், சின்னத்திரை நடிகை பாவனியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு எப்போது திருமணம் என்பது குறித்து ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமீர்-பாவனி திருமணம் எப்போது? அவர்களே சொன்ன தகவல்!
அமீர்-பாவனி திருமணம் எப்போது? அவர்களே சொன்ன தகவல்!

அமீர்-பாவனியின் பிக்பாஸ் காதல்..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன சீரியல்ளில் நடித்தவர், பாவனி. சின்ன தம்பி, ரெட்டை வால் குருவி உள்ளிட்ட தொடர்களின் மூலம் இவருக்கு பலர் ரசிகர்களாக மாறினர். பாவனி, ஏற்கனவே பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் ஒருமுறை சண்டை நிகழ்ந்த போது, அவர் வீட்டில் இருந்த போதே வேறு ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பாவனிதான் அவர் தற்கொலைக்கு காரணம் என பலர் அபாண்டமாக பேசினர். அதையெல்லாம் விடுத்து, பாவனி பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டார்.

நடன இயக்குநராக இருக்கும் அமீர், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாவனி சோர்வாக இருந்த சமயத்திலும், அவருக்கு அழுகையில் தாேள் தேவைப்படும் நேரத்திலும் உற்ற துணையாக இருந்தார். சில நாட்கள் கழித்து தனது காதலை பாவனியிடம் வெளிப்படுத்தி விட்டார். முன்னர் அதை ஏற்க மறுத்த பாவனி ‘பிக்பாஸ் ஜோடி’ நிகழ்ச்சியில் அந்த காதலை ஏற்றுக்கொண்டார்.

விரைவில் திருமணம்?

அமீரும் பாவனியும் காதலிக்க ஆரம்பித்த பிறகு, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களின் திருமணம் எப்போது என்பது குறித்து ரசிகர்கள் விடாமல் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், அது குறித்து இருவரும் மூச்சு விடாமல் இருந்தனர். இதனால், இவர்களுக்குள் இருந்த உறவு முறிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாவதால் அது பொய்யான தகவல் என அனைவருக்கும் தெரிந்து விட்டது.

இந்த நிலையில், இவர்கள் இருவருமே இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் ஒரு நிகழ்ச்சியில் கேட்டதற்கு அவர்களும் அதை உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேதான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் இவர்களின் திருமணம் சில மாதங்களில் நடக்கும் என கூறப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles