நீரழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்! புறக்கணிக்க வேண்டாம்!

 

Diabetes: நீரழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்! புறக்கணிக்க வேண்டாம்!
Diabetes: நீரழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்! புறக்கணிக்க வேண்டாம்!

நீரிழிவு நோய் ஏற்பட்டுவிட்டால் அது உடலின் எல்லா பாகங்களையும் மெதுவாக பாதித்து, அதிகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். மேலும், உங்கள் தோலில் ஏற்படும் சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு நீரழிவு நோய் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். நீரிழிவு நோய் உங்கள் தோலை பாதித்தால், ​​உங்கள் குளுக்கோஸ் அளவுகள் மிகவும் அதிகமாக இருக்கிறது என்றும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் ஆகும். பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று, அரிப்பு, கொப்புளங்கள் போன்ற பல தோல் பிரச்சினைகள் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களிடையே இருக்கும் பொதுவானவை அறிகுறிகள் ஆகும்.

நீரிழிவு நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்

தோலில் சில திட்டுகள் சிறியதாக தொடங்கி, அவை பருக்கள் போல தோற்றமளிக்க ஆரம்பித்து வீங்கிய மற்றும் கடினமான தோலின் திட்டுகளாக மாறும். நெக்ரோபயோசிஸ் லிபோடிகா என்றும் அழைக்கப்படும் இந்த நிலை, இரத்த நாளங்கள் அதிகமாக தெரியும் போது தோல் பளபளப்பான, பீங்கான் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது சருமத்தில் அரிப்பு மற்றும் வலியை உண்டாக்கும். இது பாதிப்பில்லாத நிலையில் இருந்தாலும், நெக்ரோபயோசிஸ் லிபோடிகாவை மற்ற அடிப்படை உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு அதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

உங்கள் கழுத்து, அக்குள் அல்லது இடுப்பைச் சுற்றி கருமையான திட்டுகள் அல்லது பட்டைகள் இருந்தால், உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இது ப்ரீடியாபயாட்டீஸ்க்கான பொதுவான அறிகுறியாகும். அகாந்தோசிஸ் நிக்ரிகன்1 என்றும் அழைக்கப்படும், இந்த தோல் நிலை பெரும்பாலும் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது.

கொப்புளங்கள்

நீரிழிவு நோய் ஏற்பட்டால் தோலில், குறிப்பாக கைகள் அல்லது கால்கள் அல்லது இரண்டிலும் அதிகமான கொப்புளங்களை காண முடியும். இந்த கொப்புளங்கள் பெரும்பாலும் கடுமையான தீக்காயங்கள் போன்ற தோற்றத்தை போல் இருக்கும், ஆனால் வலி இருக்காது. நீரிழிவு புல்லா 2 என்றும் அழைக்கப்படும், இந்த கொப்புளங்கள் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். அதே போல கிரானுலோமா வளையம் ஒரு மோதிர அமைப்பில் அதிகமான சொறி அல்லது புடைப்புகளை ஏற்படுத்துகிறது, இது பெரும்பாலும் இளம் வயதினரின் கைகள் மற்றும் கால்களில் பாதிக்கிறது. சிறிய தோல் காயங்கள் நிறைய மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

நெக்ரோபயோசிஸ் லிபோய்டிகா நீரிழிவு நோய்

இது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஒரு அசாதாரண தோல் நிலை ஆகும். இது பெரும்பாலும் கால்களின் கீழ் பகுதியை பாதிக்கிறது. கால்களில் சிவப்பு-பழுப்பு நிற திட்டுகளை ஏற்படுத்துகிறது. இது இரத்த நாள அழற்சியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த தோல் நிலை தோலில் உள்ள கொலாஜன் போன்ற புரதங்களை சேதப்படுத்துகிறது மற்றும் பொதுவாக வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகிறது. புகைபிடித்தல் நெக்ரோபயோசிஸ் லிபோய்டிகா டயபெக்டோரம் அபாயத்தை அதிகரிக்கிறது, இருப்பினும், நீரிழிவு நோயாளிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles