18 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-கேது இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க நிறைய ஆபத்துகளை சந்திக்கப் போறாங்களாம்…!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் அதாவது ஒவ்வொரு 28 முதல் 30 நாட்களுக்கும் தன்னுடைய ராசியை மாற்றிக் கொள்கிறது. இந்த மாற்றத்தின் போது, ​​சூரியன் மற்ற கிரகங்களுடன் இணைகிறது. இந்த சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு, இது நேர்மறையான விளைவுகளைத் தருகிறது, அதேசமயம் சிலருக்கு எதிர்மறையான விளைவுகளை தரப்போகிறது.

18 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-கேது இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க நிறைய ஆபத்துகளை சந்திக்கப் போறாங்களாம்...!
18 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-கேது இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க நிறைய ஆபத்துகளை சந்திக்கப் போறாங்களாம்…!

செப்டம்பர் 16 அன்று, சூரியன் கன்னி ராசியில் இரவு 07:29 மணிக்கு சஞ்சரித்தார்ர். இந்த ராசியில் கேது ஏற்கனவே இருக்கிறார். இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னி ராசியில் சூரியனும் கேதுவும் இணைகிறார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை, சூரியன் இதே நிலையில் இருக்கப் போகிறார். சூரியனும் கேதுவும் இணைவதால் சில ராசிக்காரர்கள் எதிர்மறை விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனும் கேதுவும் இணைவது சிக்கலான காலகட்டத்தை ஏற்படுத்தப்போகிறது. நீங்கள் ஏதேனும் சட்ட வழக்குகளில் சிக்கி இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தோல்விகளை சந்திக்க நேரிடும். உங்களின் எதிரிகளின் கை ஓங்கி இந்த காலகட்டத்தில் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

உங்கள் உணவுப்பழக்கம் மீது கவனம் செலுத்துங்கள்.அவர்கள் வயிறு அல்லது இதயம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதயம் தொடர்பான நோய்களை நீங்கள் எதிர்கொண்டால், சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் யாருக்கும் கடன் கொடுக்காமல் இருந்தால் நல்லது.

கன்னி

சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை கன்னி ராசிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கன்னி ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் இந்தக் காலகட்டத்தில் அதிகரிக்கும், ஆனால் அதனை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். வியாபாரிகள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் உங்கள் பயணத்தின் போது விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சில் கட்டுப்பாடு வேண்டும் மற்றும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு நெருக்கமானவருடன் சண்டை ஏற்படலாம். இது முதலீட்டிற்கு சாதகமான காலம் அல்ல. பணத்தை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். யாருடனும் சண்டையில் ஈடுபடாதீர்கள் மற்றும் பிரச்சனையான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மீனம்

சூரியனும் கேதுவும் இணைவதால் மீன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் இடையே ஒருங்கிணைப்பு குறைபாடு வரலாம். இந்த காலத்தில் யாருடனும் கூட்டு சேர்ந்து வேலை செய்யாதீர்கள்.

குடும்ப உறுப்பினர்களுடனும் கருத்து வேறுபாடுகள் வரலாம். இதனால் குடும்ப அமைதியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மீன ராசிக்காரர்களின் உடல்நிலை மோசமாகவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் சனிபகவானின் கோபப்பார்வையும் அவர்களை பாதிக்கலாம், எனவே அவர்கள் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles