பிக்பாஸ் இறுதிப்போட்டியில் முந்தைய சீசன்கள் போல் நான்கு பேர் இருக்க மாட்டார்களாம்…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் ஆஜித் வெளியேறி இருக்கிறார்.
தமிழ் பிக்பாஸ் 4-வது சீசன் நிறைவு நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 100-வது நாளுக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் கேபி, ஷிவானி, ரம்யா, சோம், ஆஜித் ஆகிய ஐந்து பேரும் இடம் பிடித்தார்கள்.
இவர்கள் ஐந்து பேரை விடுத்துப் பார்த்தால், ஆரி, பாலா, ரியோ ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். ஃபைனலுக்கு நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனில், இந்த வாரமும் அடுத்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கலாமென எதிர்பார்க்கப்பட்டது.
பிக்பாஸ் ஆஜித்
ஆனால் ஃபைனலில் முந்தைய சீசன்கள் போல் நான்கு பேர் இருக்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
எனவே இந்த வார எவிக்ஷனில் குறைவான ஓட்டுகள் வாங்கிய ஆஜித் வெளியேறி இருக்கிறார். ஆஜித் வெளியேறியதற்கான எபிசோடின் ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. அது நாளை இரவு டிவியில் ஒளிபரப்பாகும்.
பிக்பாஸ் தொடங்கிய இரண்டாவது எவிக்ஷனிலேயே வெளியேறி இருக்க வேண்டியவர் ஆஜித். ஆனால், அப்போது எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் மூலம் தப்பித்துவிட்டார்.
ஃப்ரீ பாஸ் ஒருதடவைதான் உதவும் பாஸ்!