21 குண்டுகள் முழங்க நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது

கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும் பிரபல கன்னட நடிகருமான அம்பரீஷ் உடல் பெங்களூருவில் உள்ள கன்ட்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்(66) பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் முன்னர் மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

உடல்நலக்குறைவால் பெங்களூரு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் மறைந்த செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருக்கு சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள கன்ட்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அம்ரீஷின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சிதைக்கு அம்ரீஷின் மகன் அபிஷேக் தீமூட்டினார்.

Ambareesh 1. thinatamil |

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல் மந்திரிகள் எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles