பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள 16 போட்டியாளர்களுக்கு சுவாரஸ்யமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது தங்களது வாழ்வில் நடந்த சோகமான விஷயங்களை போட்டியாளர்கள் கூற வேண்டும். இதனால் சூடுப்பிடித்திருக்கும் பிக்பாஸில் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தராக இந்த டாஸ்க்கில் பங்கேற்ற வருகின்றனர்.
இதனால் பார்வையாளர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலையில் இதற்கு நடிகை கஸ்தூரி ரியாக்ட் செய்துள்ளார். அவர் கூறுகையில், போதும் விட்டுவிடுங்கள்.. அழுகை வரவில்லை. இதற்கு மேல் வர வேண்டுமென்பதற்காக லொஸ்லியா இலங்கை போரை பற்றி சொல்லவிட போகுதோ என்று பயமாக இருக்கிறது என ட்விட் செய்துள்ளார்.
போதும்பா விட்ருங்கப்பா… இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க… இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை… இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு…
— Kasturi Shankar (@KasthuriShankar) June 28, 2019



