ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும்.

வித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழிபடத்தை இயக்கியவர்.

இதுபற்றி ஜோதிகாவிடம் கேட்டபோது, படத்தயாரிப்பாளர்கள் இதுதொடர்பாக தன்னை அணுகினார்கள். இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. வித்யாபாலன் நடித்துள்ள அந்த இந்திப் படத்தை நான் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது. இப்போதைக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. அதன்பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் ‘தும்ஹரி சுளு’ படப்பிடிப்பு தொடங்கும் என்றார். #Jyothika #VidyaBalan

இணையதளத்தில் வெளியான ஸ்ரேயா படம் – படக்குழு அதிர்ச்சி

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles