ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி – சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரஜினி மக்கள் மன்றத்துக்கு அரசியல் கட்சி பாணியில் அணிகள் பிரிக்கப்பட்டு மாவட்டம் தோறும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் ரஜினி மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூர் நாட்டுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியானது.

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினி உத்தரவிட்டுள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்துவந்த சுகன்யாவிற்கு ‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்மூலம் சுகன்யாவிற்கு ரஜினியிடம் நல்ல அறிமுகமும் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூர் செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சுகன்யாவின் குடும்பம், தந்தையின் பணி காரணமாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறது. இதுகுறித்து பேசிய சுகன்யா, “சிங்கப்பூரில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.

ஆனால் தனித்தனியாக இயங்குகிறார்கள். அப்படி தனித்தனியாக இயங்குபவர்களை ஒன்றிணைப்பதே எங்கள் முதல் நோக்கம். ரஜினி முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என கூறி உள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles