பிக்பாஸ் 2வது சீசனில் காதல் ஜோடியாக வலம் வந்த மஹத்-யாஷிகா இன்று நடந்த எலிமினேஷனால் பிரிந்துவிட்டனர். மஹத் வெளியேற்றப்பட்ட பிறகு ஸ்மோக்கிங் ரூமில் கதவை மூடிக்கொண்டு கதறி கதறி நீண்ட நேரம் அழுதார் யாஷிகா.
அதன் பின் மஹத்தை வீட்டின் உள் இருக்கும் போட்டியாளர்களுடன் பேசவைத்தார் கமல். அப்போது பேசிய யாஷிகா “நீ ரொம்ப நல்லவன்.. ஐ மிஸ் யூ.. பிராச்சியையும் மிஸ் பண்ணதா சொல்லு.. ஐ லவ் யு” என கூறினார்.
அதனால் இனி மஹத் பிராச்சியுடன் சேரப்போகிறார் என யாஷிகா முடிவெடுத்தது போலவே தெரிகிறது. அது மட்டுமின்றி ஜனனி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் “நீ முதலில் போய் பிராச்சியை பாரு” என்று தான் சொல்லி அனுப்பினர்.
இனி யாஷிகா-மஹத் காதல் என்னவாகும் என்பது போகப்போக தான் தெரியும்.




