Friday, March 29, 2024

Top 5 This Week

Related Posts

மறு அவதாரம் எடுக்கும் எலக்ட்ரானிக் கழிவுகள் – இந்திய வம்சாவளி பெண் சாதனை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியவம் சாவளி பெண் விஞ்ஞானி வீணா சகஜ்வாலா. இவர் நியூசவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார்.

இவர் பயன்படாத ‘ஸ்மார்ட்போன்’, ‘லேப்டாப்’ (மடிகணினி) போன்றவற்றின் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் ‘மைக்ரோ’ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்.

- Advertisement -

இது உலகில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள ‘மைக்ரோ’ தொழிற்சாலையாகும். எலெக்ட்ரானிக் கழிவு பொருட்களால் சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்துக்கு கடும் பாதிப்புகளும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே அவற்றை பயனுள்ள பொருட்களாக, மாற்றும் முயற்சியில் வீணா ஈடுபட்டார்.

- Advertisement -

Contact Now!

தனது தீவிர முயற்சிக்கு பிறகு அதில் வெற்றி பெற்றார். எலெக்ட்ரானிக் கழிவுகள் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

வீணாகும் கம்ப்யூட்டர் சர்க்கியூட் போர்டுகள் 3டி பிரிண்டிங்குக்கு தேவையான ‘கிரேடு செராமிக்ஸ்’ மற்றும் பிளாஸ்டிக் நார்களாகவும் மாற்றி உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த தகவலை வீணா சகஜ்வாலா தெரிவித்தார். மும்பையை சேர்ந்த இவர் 1986-ம் ஆண்டு கான் பூர் ‘ஐ.ஐ.டி.’யில் ‘பி.டெக்’ என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். #Veenasahajwalla

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link