நடிகை பிபாஷா பாசு கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்தவர், பிபாஷா பாசு. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், மும்பை மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பதற்றம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவரது உடல் நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.



