சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் கடவுளாக பார்க்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோவை பார்ப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.
அப்படி நடிகர் சல்மான் கானின் 15 வயது ரசிகை ஒருவர் போபாலில் வீட்டில் இருந்து வெளியேறி மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டின் சுவர் ஏறி குதித்துள்ளார்.
ஆனால் 9ம் வகுப்பு படிக்கும் அந்த பெண் அந்த அபார்ட்மெண்டின் காவலாளியிடம் சிக்கிவிட்டார். பாந்த்ரா போலீசில் அவரை காவலாளி ஒப்படைத்துள்ளார்.
போலீஸ் அவரின் பெற்றோர் போன் நம்பர் வாங்கி அவர்களிடம் மகள் பற்றி தெரிவித்து வந்து அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளனர்.
சில நாட்கள் முன்பு தான் ஒரு பெண் சல்மான் வீட்டுக்குள் நுழைந்து ‘சல்மான் என் கணவர்’ என கத்தி கூச்சல் போட்டதால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 15 நாட்களுக்குள் மற்றொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


