யா ஸா பத்மாஸனஸ்தா விபுலகடிதடீ பத்ம பத்ராயதாக்ஷீ
கம்பீராவர்த்த நாபி: ஸ்தனபர நமிதா சுப்ரவஸ்த்ரோத்தரீயா
லக்ஷ்மீர் திவ்யைர் கஜேந்த்ரைர் மணிகண கசிதை:
ஸ்நாபிதா ஹேமகும்பைர் நித்யம் ஸா பத்மஹஸ்தா மம வஸது க்ருஹே ஸர்வ மாங்கல்ய யுக்தா:
மஹாலட்சுமி துதி
பொதுப் பொருள்:
தாமரையில் வீற்றிருப்பவளாகவும் பருத்த ஸ்தனங்களைக் கொண்டவளாகவும், தாமரையிதழ் போன்ற அகன்ற கண்களைக் கொண்டவளாகவும், கம்பீரமான சுழல் பொருந்திய நாபியையுடையவளாகவும், ஸ்தன பாரத்தால் வளைந்தவளாகவும், வெண்ணிற ஆடை அணிந்தவளாகவும், ரத்னங்கள் இழைத்த பொற்கலச புனித நீரால் தேவலோகத்து சிறந்த யானைகளால் அபிஷேகம் செய்யப்பட்டவளாகவும் தாமரையைக் கையில் ஏந்தியவளாகவும், எல்லா மங்களங்களுடன் கூடியவளாகவும் உள்ள லட்சுமி தேவி எப்போதும் என் வீட்டில் வாசம் செய்தருள வேண்டும்.
(அட்சய திருதியையன்று ஆரம்பித்து தினமும் நெய்விளக்கேற்றி இத்துதியை பாராயணம் செய்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும். செல்வ வளம் பெருகும்.)



