நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தாள் எடுத்து முடிக்கப்பட்ட பல சில படங்கள் வெளியிட முடியவில்லை. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தனிக்கை செய்யப்பட்ட படங்கள் விரைவில் வெளியிட உள்ளன. ஏற்கனவே, அறிவித்தபடி ரஜினியின் காலா ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸாக வேண்டும். ஆனால் தணிக்கை செய்த தேதிகளின் அடிப்படையில்தான் படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதாவது: அனைத்துப் படங்களும் வெளியாகும் தேதியை முடிவு செய்வோம். வேலை நிறுத்தத்தால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த படங்களை வெளியிட முடியவில்லை. வரிசைப்படி படங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். எந்தப் பாகுபாடும் காட்டாமல், வாரத்திற்கு 3 படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு கூறியுள்ளது. இதன்மூலம் காலா படம் ஏப்ரல் 27 ம் தேதி அன்று வெளியாகுவது சந்தேகம் தான்.


