சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமாவைப்போல ரசிகர்கள் வரத்தொடங்கிவிட்டனர்.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நாயகி சரண்யாவுக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு முன்பு இவர் செய்தி தொலைக்காட்சியில் நிரூபராகவும், தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இவரின் முதல் காதல் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மீது தானாம். பள்ளிமாணவியாக இருந்தபோது இவரைப்பார்க்க பெங்களூருக்கு செல்ல வேண்டும் என்று கூட முயற்சித்தாராம்.
ஆனால் டிராவிட்டுக்கு திருமணமானதால் எனது காதல் தோல்வியில் முடிந்தது என கலகலப்பாக கூறினார்.



