லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களில் ஒன்றாக சமீபத்தில் ‘மேகதாது’ என்ற சிங்கிள் பாடல் வெளியானது.
இதனையடுத்து இரண்டாம் சிங்கிள் பாடல் இவ்வாரம் வெளியாகவிருப்பதாகவும், இந்த பாடல் ‘கா’ என்ற எழுத்தை கொண்ட வார்த்தையில் ஆரம்பிக்கும் என்றும் படக்குழுவினர் சஸ்பென்ஸ் வைத்தனர். இந்த வார்த்தையை கண்டுபிடிக்க ரசிகர்கள் பெரும் முயற்சி எடுத்தனர்
இந்த நிலையில் ‘காரிகை’ என்ற வார்த்தையில் இந்த பாடல் தொடங்குவதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். ‘காரிகை’ அல்லது காரிகா என்றால் பெண் என்று அர்த்தமாம். மதன்கார்க்கி வரிகளில் கேஎஸ் சுந்தரமுர்த்தி இசையில் உருவான இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.
முதல்முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.



