2000வது ஆண்டில் உலகஅழகி பட்டம் வென்ற பிறகு தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
அவர் தற்போது அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ்ஸை திருமணம் செய்யவுள்ளார். அவரின் திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில் தற்போது சங்கீத் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.







