தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கின்றார். இவர் படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.
அந்த வகையில் விஜய் இன்று தயாரிப்பாளர், இயக்குனர்களை மிகவும் மதிப்பவர், அவர்கள் சொல்வதை அப்படியே கேட்பவர், எந்த ஒரு தடங்கலும் இவரால் அவர்களுக்கு வராது.
அப்படியிருக்க விஜய் நடிக்க வந்த புதிதில் ஒரு படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் எழுந்து வந்துவிட்டாராம்.
இதை அறிந்த அவருடைய அப்பா, விஜய்யை அழைத்துச்சென்று எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வைத்தாராம்.
அப்போதிலிருந்து தொழில் விஷயத்தில் விஜய்க்கு கண்டிப்பு காட்டியதால் தான், இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.



