நடிகர் சூர்யா அவருக்கென ஒரு தனி பாணியை வைத்துள்ளார். அவருக்கு எப்படியான கெட்டப்பும் பொருந்தி விடும். எத்தனை நடிகர்கள் போலிஸாக நடித்தாலும் சூர்யா நடித்தது போல வருமா என சொல்லலாம்.
சூர்யாவுக்கு அப்போதே அப்படி ஒரு பெருமையை தந்தது அவரின் காக்க காக்க திரைப்படம். அதையும் தாண்டி சிங்கம் படம் இன்னும் நன்றாக அமைந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என படங்கள் வந்துவிட்டது.
இந்த சிங்கம் படம் தற்போது கார்டூன் வடிவத்தில் வரவுள்ளது. இதை ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்த ரோகித் ஷெட்டி தான் இந்த புது முயற்சியை எடுத்திருக்கிறாராம்.
இந்த முயற்சியில் டிஸ்கவரி நிறுவனமும் இணைந்துள்ளது. வரும் கோடை காலத்தில் ஏப்ரல் முதல் லிட்டில் சிங்கம் எனற பெயரில் இந்த தொடர் வரவுள்ளதாம்.



