சமுத்திரக்கனி இயக்கத்தில், உன்னைச் சரணடைந்தேன் என்ற படத்தை தயாரித்து நடித்தார் எஸ்.பி.சரண். பல காரணங்களால் சில வருடங்களாக படம் தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்த அவர், இப்போது மீண்டும் ஒரு படம் தயாரிக்கிறார். அதை இயக்க சமுத்திரக்கனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன் தலைப்பு, அப்பா 2.
ஏற்கனவே சமுத்திரக்கனி இயக்கி நடித்திருந்த அப்பா படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகிறது. முதல் பாகத்தில் மாணவ, மாணவியராக இருந்தவர்கள், இப்போது நன்கு வளர்ந்து பெரியவர்களாகி கல்லூரிக்குச் செல்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் லவ், மோதல், சென்டிமென்ட் ஆகியவற்றைக் கலந்து கதை எழுதப்பட்டுள்ளது.



