சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணே கலைமானே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் உதயநிதி வெளியிட்டுள்ளார். இப்படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, பாடல்களை கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இப்படம் மிக விரைவில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




