சமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி

நடிகை சமந்தாவால் செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையை அடுத்து உள்ள செங்குன்றத்தில் ஜி.என்.டி. சாலையில் கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்தை நடிகை சமந்தா திறந்து வைத்தார். இந்த வணிக வளாக திறப்பு விழாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ப்ரியங்காவும் கலந்து கொண்டார். சமந்தா வரும் தகவல் அறிந்து ரசிகர்களும், பொது மக்களும் அந்த வணிக வளாகம் முன்பு கூடிவிட்டனர்.

காரில் இருந்து சமந்தா இறங்கியதும் அவருடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முந்தியடித்தனர். அவருக்கு பாதுகாப்பாக வந்த தனியார் பாதுகாவலர்களும், போலீசாரும் ரசிகர்களை தடுத்தனர்.
எங்க சமந்தாவுடன் நாங்க செல்ஃபி எடுக்கக் கூடாதா என்று ரசிகர்கள் முந்தியடித்ததால் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை பாதுகாப்பு பணிக்கு குறைந்த அளவே போலீசார் வந்திருந்ததாால் அவர்கள் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

சமந்தாவை பார்க்க கூட்டம் கூடியதால் ஜி.என்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles