தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திருமணத்திற்கு பின்பு நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
சிறிய வேடங்களில் மட்டும் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளிவந்த வேலைக்காரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக உடலை வெகுவாக வருத்தி நடித்திருந்தார்.
இனி வரும் படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார். உடன் அவரது கணவரான நடிகர் பிரசன்னாவும் உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


