#Amy Jackson
நடிகை எமிஜாக்சன் மதராஸபட்டினம் படம் மூலம் தமிழுக்க வந்தார். பின் ரஜினி, விக்ரம் என பெரிய நடிகர்களின் படங்களில் ஹீரோயின் ஆகிவிட்டார். தற்போது சூப்பர் கேர்ள் என்னும் அமெரிக்க டிவி சீரியலில் நடித்து வருகிறார்.
அவருக்கு இந்தி நடிகர் பிரதிக் பாபருடன் காதல் தோல்வியானது. அண்மையில் அவர் அடிக்கடி இரவு விருந்துகளில் அதிகம் கலந்துகொள்வதாக தகவல் வெளியானது. இதில் அவரது ரகசிய காதலுன் கலந்துகொண்டுள்ளார்.
இருவரும் இணைந்திருந்த புகைப்படம் ஒன்று வெளியாக பலருக்கும் அதிர்ச்சி. தற்போது அவர் யார் என விசயம் லீக்காகியுள்ளது. அவரின் பெயர் ஜார்ஜ் பனயோடவ்.
இங்கிலாந்து நாட்டில் கிளப், ரியல் எஸ்டேட் நடத்தி வரும் பெரிய தொழிலதிபராம். காதலர் தினத்தை இருவரும் கனடா நாட்டில் கொண்டாடியுள்ளார்கள். பீச் ஹோட்டலில் 3 நாட்கள் இருந்து நன்றாக கொண்டாடியுள்ளனராம்.
இந்த புகைப்படத்தை எமி இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.




