நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். அதே நேரத்தில் அவர் தன் படங்களிலும் நடித்து வருகிறார்.
அவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் புத்தாண்டிற்கு வெளிவரும் என படக்குழு முன்பே அறிவித்தது.
தற்போது டில்லியில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்போது திடீரென விஷாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவருக்கு தீவிரமாக சிகிச்சை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



